மாவீரன் வெள்ளையப்பன்
இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் மாவீரன் வெள்ளையப்பன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா துரைச்சாமியாபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்ததே விவசாயத்தின் மீது நாட்டம் அதிகம் கொண்டதால் மூத்த அண்ணன்களுடன் ஒன்று சேர்ந்து விவசாய தொழிலை கவனித்து வந்தார். அதனாலேயே பள்ளிக்குச் செல்லும் நாட்டம் குறைந்து பள்ளிப்படிப்பை துவக்கத்திலேயே நிறுத்தினார். வீட்டில் கடைக் குட்டியாக இருந்த வெள்ளையப்பன் அவர்கள் வீட்டிற்கு செல்ல பிள்ளையாக மூத்த அண்ணன்களின் கவனிப்பில் வளர்ந்து வந்தார்.
சிறுவயதிலேயே எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர் வெள்ளையப்பன். அண்ணன்கள் உடன் விவசாயம் செய்து விவசாயத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அந்த குடும்பம் அடைந்தது. வெள்ளையப்பன் அவர்கள் சிறுவயதிலிருந்து துடுக்காக எல்லோரிடமும் பேசுபவர். ஒரு சமயம் அவரது இளைய அண்ணன் திடீரென்று இறந்துவிட அவரது அண்ணி அவர்கள் விதவை கோலத்தில் நின்ற காட்சி வெள்ளையப்பனின் மனதை உருக்கியது. அவரது பேச்சு நின்றுபோனது பல மாதங்களுக்கு அவரால் வாய் திறந்து பேச முடியவில்லை. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் பேச்சு வரவில்லை.
அந்நேரத்தில் அவரது பக்கத்து ஊரில் RSS அமைப்பில் தினசரி ஷாகா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த ஷாகா வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தினசரி ஷாகாவிற்கு சென்று வந்து அங்கே RSS பொறுப்பாளர்கள் பயிற்சி மூலமாக வெள்ளையப்பனுக்கு திரும்பவும் பேச்சு வந்தது. இதனால் அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதும், இந்து சமுதாயத்தின் மீதும் பற்று அதிகம் ஆனது.
வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை வந்து தாம்பரத்தில் ஒரு தள்ளு வண்டியில் பழக்கடை நடத்தி வந்தார். தாம்பரத்தில் தாம்பரம் அம்மா என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அம்மா ரக்ஷா பந்தன் அன்று எல்லோருக்கும் ராக்கி கட்டி கொண்டு இருக்கும் போது ராக்கி எனக்கும் கட்டுங்கள் என்று தானாக சென்று அறிமுகமாகிறார். அம்மா மூலமாக திரும்பவும் சங்கத்திற்கு அறிமுகமாகிறார்
தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபடும் வெள்ளையப்பன் தாம்பரம் சானிடோரியத்தில் ஒரு இளநீர் கடை நடத்தி வருகிறார். அப்போது விநாயகர் சதுர்த்தி நேரத்தில் தாம்பரம் ஜோதி நகரில் முதல் முதலாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் திருமேனி வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துகிறார். அன்று முதல் ஹிந்து முன்னணி யில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் இந்து முன்னணி பொறுப்பாளராக இந்து சமுதாய பணியைத் தொடர்ந்தார். பின்பு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி வளர்ச்சிக்காக வேலூர் கோட்ட பொறுப்பாளராக வெள்ளையப்பன் அறிவிக்கப்படுகிறார். அன்றிலிருந்தே வேலூரின் மகனாக வெள்ளையப்பன் தனது இயக்க பணியை தொடர்கிறார்.
திருச்சியில் பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி கட்டிட வேலைக்காக. அப்போதைய வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பெரியோர்களை சந்தித்து கட்டிட நிதிக்காக நிதி திரட்டி வீரத்துறவி இராமகோபாலன் அவர்களிடம் ஒப்படைக்கிறார். ஒருசமயம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் உள்ள பத்தியாவரம் கிராமத்தில் வெள்ளைக்காரன் காலத்திலேயே கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்.அங்கிருக்கும் பாதிரியார்களால் மிகக் கீழ்த்தரமாக நடத்துவதாக கூறி மிகப்பெரிய பிரச்சினை எழுந்தது. அப்போது அங்கிருந்த தலித் சமுதாய மக்கள் நாங்கள் திரும்பவும் இந்து மதத்தில் சேர விரும்புகிறோம் என்று சொன்னபோது அங்கு சென்ற வெள்ளையப்பன் அந்த மக்களை நேரடியாக சந்தித்து அந்த மக்களிடம் பேசி அங்கு வீரத்துறவி ராமகோபாலன் அவர்களை வரவழைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை தாய் மதத்துக்கு திரும்ப வைத்தார்.
அடுத்ததாக வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோட்டை கோவிலின் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த 25 ஆவது ஆண்டுவிழா மிக பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை மிக அதிகமாக இருந்தது. அந்தத் தோல் பதனிடும் தொழிற்சாலை பெரும்பாலும் முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது. அங்கு வேலை செய்யும் ஹிந்துக்கள் மிகப் பெரும் துன்பத்தை அடைந்து வருகின்றனர் .ராணிப்பேட்டை எம் ஏ கே எச் என்கிற ஒரு மிகப்பெரிய தோல் பதனிடும் தொழிற்சாலையில் நெடுங்காலமாக பணி செய்து வந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களை ஒரு காரணமும் இன்றி வேலையை விட்டு நிறுத்தினார்கள். அந்த ஊழியர்கள் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களிடம் சென்று தங்களுக்கு உதவும் படி கேட்டனர். எங்களுக்கு துரோகம் செய்து வேலையை விட்டு நிறுத்தினார்கள் என கம்யுனிஸ்ட் தொழிற்சங்கத்தையும் நாடி உதவி கேட்டனர். எவரும் முஸ்லிம் கம்பெனிக்கு எதிராக பேச கூட தயாராக இல்லை.
அவர்கள் இந்து முன்னணியை நாடி வெள்ளையப்பன் அவர்களிடம் உதவி கேட்டனர். வெள்ளையப்பன் அவர்கள் அந்த தொழிற்சாலையை அதிகாரிகளிடம் நேரடியாக சென்று தொழிலாளர்களுக்காக பேசினார். தொழிற்சாலை நிர்வாகம் ஏற்க வில்லை. மாறாக வெள்ளையப்பனிடம் முன்னாள் எம்எல்ஏ அசேன் மூலமாக பேரம் பேசினார்கள்.எதற்கும் மசியாத வெள்ளையப்பன் அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும் ஒன்று சேர்த்து அந்த தொழிற்சாலை முன்பு மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் வெள்ளையப்பன். பயந்து போன தொழிற்சாலை நிர்வாகம் உடனடியாக தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தது.வெள்ளையப்பன் அவர்களின் இந்த அதிரடியான போராட்டத்தின் மூலமாக தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைத்தது.
வேலூர் மாவட்டத்தில் பல கிறிஸ்துவ மத மாற்றத்தையும் மிகப்பெரிய பிரச்சாரத்தையும் தடுத்தவர் வெள்ளையப்பன் அவர்கள். வேலூர் கோட்டை மைதானத்தில் கிருத்துவ மத பிரச்சாரகன் பால் தினகரனின் மதமாற்ற பிரச்சார கூட்டத்தை தடுத்து நிறுத்தினார். வெள்ளைப்பன் அவர்கள் எல்லோரிடத்தும் மிக அன்பாக பழகுபவர் டீக்கடை காரர்களிடம் இருந்து பெரிய ஹோட்டல் அதிபர் வரையிலும். ஆட்டோ ஓட்டுனரிலிருந்து பஸ் லாரி அதிபர்கள் வரையிலும்.பெரிய தொழிற்சாலை அதிபர்கள் பல்கலைக்கழக வேந்தர்கள் அனைவரிடத்திலும் அறிமுகமாகி மிக நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்ற வல்லமை படைத்தவர் வெள்ளையப்பன்.
இராம. கோபாலன் அவர்களின் 85வது பிறந்த நாள் விழாவை வேலூர் கோட்டை மைதானத்தில் வேலூரில் உள்ள அத்தனை சமுதாய பெரியோர்களை விழா மேடையில் அமர வைத்து மிக பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். அந்த நிகழ்ச்சிக்கு வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சுவாமி விவேகானந்தர் 150-வது ஆண்டு விழா வேலூரில் காவி கோலம் பூண்டது. வேலூரில் 150 இடத்தில் 150 பெரியவர்களை வைத்து புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.
வேலூர் மாவட்டம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் அங்கிருக்கும் இந்துக்களுக்கு எல்லாவிதத்திலும் முஸ்லிம்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. திட்டமிட்டு இந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தி முஸ்லிம் இளைஞர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை காதலித்து முஸ்லிமாக மதம் மாற்றுவது வேலூர் மாவட்டத்தில் தொடர் கதையாக இருந்தது. இந்த லவ் ஜிகாத் கால் பாதிக்கப்பட்ட குடும்பம் சின்னாபின்னமாக மாறுவதும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தையும் கண்டு வெள்ளையப்பன் மனம் மிகவும் பாதித்தது. நம் ஹிந்து பெண்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தை தன் மனதில் உறுதி பூண்டார். அதை செயலிலும் காட்டினார் வெள்ளையப்பன்.
குடியாத்தத்தில் இந்து என்ற ஒரு பெண் தனது முஸ்லீம் தோழி மூலமாக 10 நாளில் அறிமுகமான முஸ்லீம் இளைஞனுடன் திட்டமிட்ட காதல் வலையில் விழுந்து முஸ்லிமாக மதம் மாறினார். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.உடனே அந்தக் குடும்பம் இந்து முன்னணி மூலமாக வெள்ளையப்பன் ஜியை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்கின்றனர். உடனே காவல்துறையிடம் பேசி அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.இந்துவாக போன தன் பெண் முஸ்லிமாக பர்தா போட்டுக் கொண்டு ஆயிஷா வாக வருவதை கண்டு பெற்றோர்கள் கதறி அழுகின்றனர்.
அவர்களை சமாதானம் செய்த வெள்ளையப்பன் அந்தப் பெண்ணிடம் ஒரு மணி நேரம் பேசுகிறார்.அந்தப் பெண்ணிடம் நீ திட்டமிட்டு லவ் ஜிகாத் என்ற காதல் வலையில் விழுத்தி இருக்கிறாய் என்று சொல்லி லவ் ஜிகாத் என்ற கொடூரத்தால் என்ன என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அந்தப் பெண்ணுக்கு விளக்குகிறார். உடனே அந்தப் பெண் மனம் மாறி அவளுக்கு நடந்த விஷயத்தை எல்லாம் வெள்ளையனிடம் சொல்லி தன்னை எப்படியாவது மீட்குமாறு கெஞ்சுகிறார். வெள்ளையப்பன் அந்தப் பெண்ணை மீட்டு கொண்டு வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்.
இதேபோல் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒரு இந்து பெண்ணை திட்டமிட்டு காதல் வலையில் விழ்த்தி முஸ்லிமாக மதம் மாற்றி பர்தாவோடு ஆற்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைகின்றனர். அங்கு நேரடியாகச் சென்று அந்தப் பெண்ணிடம் வெள்ளையப்பன் அவர்கள் பெற்றோர் மூலமாக பேசி அந்தப் பெண்ணிற்கு லவ் ஜிகாத்தின் கோர முகத்தை விளக்கி அந்தப் பெண்ணை மீட்டு கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்.
அங்கு நடந்த ஒரு காட்சி அங்கிருந்த பொறுப்பாளர்களின் மனதில் இப்போதும் பசுமரத்து ஆணிபோல் பதிய வைத்து. நம் இந்து மதத்தையும் இந்து பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வெள்ளையப்பன் மனதில் எவ்வளவு ஆழத்தில் இருந்தது என்பதற்கான ஒரு காட்சி அது. அந்தப் பெண்ணிடம் பேசி திடீரென்று அந்தப் பெண்ணின் காலில் விழுந்து அம்மா தயவு செய்து நம் ஹிந்து மதத்தை விட்டு நீ எங்கேயும் போயிடாதே நீ போயி முஸ்லிம்களிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாக போய் விடாதே கவனமாக இரும்மா என்று கண்ணீர் விட்டார். இது எல்லோர் மனதையும் கலங்க செய்தது.
வெள்ளையப்பன் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை லவ் ஜிகாத் இல் இருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை வேலூர் ஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபனம் என்ற அமைப்பால் மிக சீரும் சிறப்புமாக நடத்தி கொண்டு வருகிறார்கள். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோட்டை கோவில் இந்து சமய அறநிலையத்துறை கையகப் படுத்தும் நோக்கத்தில் கோவிலின் மீது நோட்டீஸ் விளம்பரத்தை ஒட்டிக் சென்றனர். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மீட்புப் போராட்டத்தை வெள்ளையப்பன் நடத்தினார்.
மீண்டும் ஒரு முறை வேலூரில் உள்ள வியாபாரிகள் தொழிலதிபர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் சமுதாய பெரியோர்கள் அனைவரையும் ஜலகண்டேஸ்வரர் கோவில் மீட்புப் போராட்டத்தில் பங்குபெற வைத்தார். இந்து அறநிலையத் துறையை கண்டித்து வேலூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி னார் அந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தார். முதல் போராட்டமாக விளக்கேற்றும் போராட்டத்தை அறிவித்தார் இதில் ஏராளமான தாய்மார்கள் பங்கு கொண்டனர். பின்பு வேலூரில் உள்ள எல்லா வியாபார நிறுவனங்களிலும் வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை நடத்தினார், வேலூரில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை கூட்டத்தை நடத்தினார.
2013 வருடம் ஜூலை 1ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கூட்டு வழிபாடும் இரண்டாம் தேதி மாநகர் முழுவதும் இந்து அறநிலையத் துறையை கண்டித்து கடையடைப்பு போராட்டமும் நடத்துவதாக அறிவித்தார். திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டு வழிபாடு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது கூட்டு வழிபாடு இரண்டு மணிக்கு நிறைவு பெற்று அங்கேயே பிரசாத உணவு உண்ட பிறகு சிறிது நேரம் கோவிலில் அலுவலகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டே கண் அயர்ந்தார்.
பின்பு சரியாக 3 மணிக்கு அவர் மறுநாள் போராட்டத்திற்கு தயார் செய்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பின்னாலுள்ள அவர் தங்கியிருந்த ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார் அங்கு செல்கின்ற வழியில் முஸ்லிம் பயங்கரவாதிகள் மறைந்து இருந்து அவர் மீது தாக்குதல் நடத்தி வெள்ளையப்பன் அவர்களை படுகொலை செய்தார்கள். நிற்காமல் கடிகார முள் போல் இந்து சமுதாயத்திற்காக வேலூர் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்த வெள்ளையப்பனை படுகொலை செய்தனர் முஸ்லிம் பயங்கரவாதிகள்.
வெள்ளையப்பன் இழப்பு வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. வேலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தானாக வந்து இந்த படுகொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளையப்பன் பூதவுடலை காண அலைகடலென வேலூர் தோட்டப்பாளையத்தில் குவிந்தனர். வெள்ளையப்பன் படுகொலை வேலூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மிகப்பெரிய இந்து எழுச்சியை உருவாக்கியது. ஹிந்துக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். வெள்ளையப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த வேலூரைச் சேர்ந்த பெரியவர்கள் வெள்ளையப்பன் பூத உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டாம் உறவினர்களை இங்கே வரச் சொல்லுங்கள் அவர் வேலூரின் மைந்தன். அவரது பூத உடலுக்கு இறுதி சடங்குகளை வேலூரிலியே செய்வோம். இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் உடன் பேசினார்கள். இது வெள்ளையப்பன் மீது வேலூர் மக்கள் வைத்த பாசத்தை காட்டுகிறது.
வெள்ளையப்பனை கொன்றால் ஹிந்து முன்னணியின் வளர்ச்சி நின்றுவிடும் அதோடு இந்து சமுதாயத்திற்காக வேலை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்ற முஸ்லிம் பயங்கரவாதிகளின் எண்ணம் தவிடுபொடியானது . வெள்ளையப்பனால் உருவாக்கப்பட்ட ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் முன்பை விட வேகமாக வெள்ளையப்பனின் கனவை நிறைவேற்ற உறுதி பூண்டு இன்று வேலூர் கோட்டம் முழுவதும் இந்து முன்னணி கோட்டையாக மாற்ற வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். வெள்ளைப்பனின் ஒவ்வொரு துளி ரத்தமும் நூற்றுக்கணக்கான வெள்ளையப்பன் களை உருவாக்கி கொண்டிருக்கிறது